Our Feeds


Friday, June 18, 2021

www.shortnews.lk

கொழும்பிலிருந்து புறப்பட்ட கப்பலில் எண்ணெய்க் கசிவு

 



இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் போர்த்துகீசிய கப்பலில் இருந்து கசியும் எண்ணெய் கடலில் கலப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கொள்கலன் கப்பலான எம்.வி.டெவோனில் இருந்து 10 கி.எல் (10 kiloliter)அளவில் எண்ணைய்க் கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னையிலிருந்து தென்கிழக்கில் 450 கிலோமீற்றர் தொலைவில் இந்த எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது, கொழும்பு துறைமுகத்தில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹால்டியாவுக்கு சென்றுக் கொண்டிருந்த சரக்குக் கப்பலான MV Devon vesselவில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், கப்பலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்பதால், கப்பல் தனது இலக்கை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இன்று (ஜூன் 18) மாலைக்குள் ஹால்டியா துறைமுகத்திற்கு சரக்குக் கப்பல் சென்றுவிடும்   என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எண்ணெய் கசிவு குறித்த தகவல்களை புதன்கிழமை (ஜூன் 16) பிற்பகுதியில் இந்திய கடலோர காவல்படையிடம் (Indian Coast Guard) கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையம் (Maritime rescue and Coordination Center) தெரிவித்தது. 

மேலதிக விசாரணையில் சுமார் 120 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட எம்.வி.டெவன் (MV Devon vessel) கப்பலின் இடது புற எரிபொருள் டாங்கில், விரிசல் ஏற்பட்டது தெரியவந்தது.

இந்த விரிசலின் விளைவாக 10KL எண்ணெய் கடலில் சிந்தியது, ஆனால் மீதமுள்ள எண்ணெய் மற்றொரு டாங்கில் மாற்றப்பட்டு, அதிக கசிவு தடுக்கப்பட்டது.  

இந்த கப்பல் 382 கொள்கலன்களில் 10,795 டன் சரக்குகள் செல்கின்றன.  ஏற்றிச் செல்கிறது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 17 பேர் இந்தக் கப்பலை இயக்குகின்றனர். 

ICG தொடர்ந்து கப்பலுடன் தொடர்பில் உள்ளது மற்றும் கப்பல் சரியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள ICG மாசுக் கட்டுப்பாட்டுக் குழு எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக வைக்கப்பட்டுள்ளது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய கடலோர காவல்படையில் விமானங்களும் கப்பல்களும் உதவிக்குச் செல்லத் தயார்நிலையில் உள்ளன.  

சில வாரங்களுக்கு முன்னதாக இலங்கையுடன் இணைந்து இந்திய கடலோர காவல்படை மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில், எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது. 

தற்போது கொழும்பிலிருந்து புறப்பட்ட கப்பலில் ஏற்பட்ட கசிவு சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தாமல் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »