Our Feeds


Friday, June 18, 2021

www.shortnews.lk

BREAKING: காத்தான்குடியில் 18 கடைகளுக்கு நிலையங்களுக்கு சீல்!

 



(புதிய காத்தான்குடி நிருபர்)


பயணத்தடையை மீறி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 வர்த்தக நிலையங்களுக்கு தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பின்  காத்தான்குடி நகரில் உள்ள வர்த்தக நிலையங்களே இவ்வாறு சீல் வைக்கப்பட்டன.

காத்தான்குடி பிரதான வீதி உட்பட உள் வீதிகளிலும் பொலிஸார் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இராணுவத்தினர் நகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனையின்போது பயணத்தடையை மீறி வர்த்தக நிலையங்களைத் திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 வர்த்க நிலையங்களுக்கே சீல் வைக்கப்பட்டது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் எம் எம் ஜவாகிர், சுகாதார வைத்தியதிகாரி பணிமனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், இராணுவத்தினர் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பலரும் இந்நடவடிக்கையில் பங்கு கொண்டிருந்தனர்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »