(நா.தனுஜா)
மேலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் தடுப்பூசியின் மீது மாத்திரம் நாம் முழுமையாகத் தங்கியிருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், எமது விமான நிலையங்களை முழுமையாக மூடாமல் திரிபடைந்த புதிய வைரஸ் நாட்டுக்குள் இனங்காணப்படுவதைத் தவிர்க்கமுடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ரவி ரன்னன் எலிய அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
டெல்டா வகை வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தெமட்டகொடயில் அடையாளங் காணப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தெமட்டகொட என்பது அதிக எண்ணிக்கையான மக்கள் செறிந்துவாழும் பகுதியாகும். எனவே இலகுவாகப் பரவியிருக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இந்நிலையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருக்கக்கூடிய டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும், நாட்டை முழுமையாக முடக்குவதென்பது அதற்கடுத்த திட்டமாக இருக்க வேண்டும். பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் கொத்தணியானது பல மாதங்களுக்குப் பின்னரே கண்டறியப்பட்டது. வெகுவான தாமதத்தின் பின்னரே அந்தக் கொத்தணி இனங்காணப்பட்டது.
சமூகத்தில் இருமல் மற்றும் தடிமன் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் அனைவரையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் கொள்கைகயைப் பின்பற்றாமையின் காரணமாகவே அத்தகைய தாமதம் ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
