Our Feeds


Tuesday, June 8, 2021

www.shortnews.lk

வரலாற்றில் மிக மோசமான கடல் அழிவு நடந்துள்ளது. குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குங்கள். - சஜித்

 



இன்று "கடல் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம்" என்ற கருப்பொருளின் கீழ் உலக சமுத்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  ஆண்டுக்கு பில்லியன் கணக்கான மக்களுக்கு உணவளித்தல், ஒக்ஸிஜனை உற்பத்தி செய்தல், காலநிலையை மாற்றங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பூமியின் நிலைத்தன்மைக்கு மகத்தான பங்களிப்பு செய்வது இதன் ஒரு அமைதியான பணியாக அமைந்துள்ளது.


ஆனால் வரலாற்றில் மிக மோசமான கடல் அழிவுக்கு மத்தியில் நமது உலக சமுத்திர தினத்தை கொண்டாட வேண்டிய நிலையிலுள்ளது.  அன்மையில் கடந்த இரண்டு சந்தர்பங்களில் இரண்டு கப்பல்கள் அழிக்கப்பட்ட நிலையில், பல தசாப்தங்களாக மீள சரிசெய்ய முடியாத ஒரு பேரழிவு நம் நாட்டின் சமுத்திர பரப்பில் நிகழ்ந்துள்ளது.


1. பெர்ல் கப்பலின் தீ விபத்துக்குப் பின்னர் அதன் விளைவுகள் இன்னும் பெருகி வருகிறது.அரிய கடல் ஆமைகள் மற்றும் டொல்பின்களின் சடலங்கள் கடற்கரையில் ஒதுங்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.


2. அதில் 25 டொன் நைட்ரிக் அமிலம் (Nitric acid) மற்றும் 1486 பிற இரசாயனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை உள்ளடக்கிய கொள்கலன்கள் உள்ளன, அவை நமது சமுத்திரத்தை மாசுபடுத்தியுள்ளன. பேரழிவின் அளவு கடலில் மாத்திரமன்றி, மத்திய மலைப்பகுதிகளிலும் மழைக்காடுகளிலும் வனவிலங்குகளுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது, மேலும் பல இரசாயனங்கள் நமது சமுத்திர வலயத்தை மாசுபடுத்தியுள்ளன.


3. இதுபோன்ற பேரழிவை ஏற்படுத்திய கப்பல் இந்த நாட்டின் கடறப்பரப்பிற்குள் எப்படி வந்தது என்பதற்கு அரசாங்கமோ அல்லது பொறுப்பான எவரோ இதுவரை நாட்டிற்கு பதில் அளிக்கவில்லை.


4. கப்பலின் கேப்டன் மீது குற்றவியல் குற்றத்திற்காக வழக்குத் தொடரப்படலாம், ஆனால் இதுவரை முறையான நடைமுறை எதுவும் இடம் பெற்றவில்லை.


5. கப்பல் நாட்டிற்குள் நுழைவது தொடர்பாக உள்ளூர் முகவருக்கு கப்பல் கேப்டன் அனுப்பிய பல மின்னஞ்சல் செய்திகள் நிறுவனத்தின் ஊழியரின் வழிகாட்டுதலின் கீழ் நீக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


6. இத்தகைய பேரழிவுகளை சமாளிக்க வல்ல சர்வதேச தரத்திற்கு ஏற்ற உள்நாட்டு சட்டங்கள் தகவமைபடாததால் இலங்கைக்கு இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று கடல்சார் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


7. இந்த நம்பமுடியாத பேரழிவை கையாள்வதில் அரசாங்கம் எவ்வளவு பொறுப்பானது மற்றும் தீவிரமானது என்பதைக் கண்காணிக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.இந்த கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் வலியுறுத்துகிறேன்.


8. குறிப்பாக சமுத்திரங்களை அழிப்பதற்கு எதிராக மிகவும் வலுவான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதையும், தற்போதுள்ள வழக்கற்றுப்போன சட்டங்கள் உடனடியாக திருத்தப்பட வேண்டும் என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.


தெரிந்தோ தெரியாமலோ கடல் சார் அழிவுக்கு பங்களிப்பு செய்தால், அது பூமியின் அழிவுக்கு பங்களிப்பதாக கருதப்பட வேண்டும். பூமியின் மேற்பரப்பில் சுமார் 70% கடலால் மூடப்பட்டிருக்கிறது, மேலும் அதைப் பாதுகாப்பது இதயத்தைப் பாதுகாப்பது போன்றது என்று கருதுவது நியாயமானதே.


சஜித் பிரேமதாச,

எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »