அமைச்சர் விமல் வீரவன்சவின் அமைச்சு தொடர்பில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவரின் கைத்தொழில் அமைச்சின் கீழ் செயற்பட்ட வரையறுக்கப்பட்ட லங்கா பாஸ்பேட் நிறுவனத்தை விவசாய அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நேற்று வௌியிடப்பட்ட விசேட வர்த்தமானியின் மூலம் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தனக்கு விடுத்த சட்டவிரோத கட்டளைகளை செயல்படுத்த முடியாது என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அனூஷா பெல்பித ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக சுவர்ணவாஹினி தொலைக்காட்சியின் இன்றைய “பத்தர” நிகழ்சியில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, பொது நிர்வாக சேவையில் தாம் தொடர்ந்தும் செயல்பட விரும்பவில்லை என்பதால், ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பை வழங்குமாறு அனுஷா பெல்பித தனது கடிதத்தில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
