Our Feeds


Thursday, June 3, 2021

www.shortnews.lk

VIDEO: கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்.

 



கொரோனா நோயாளர்களுக்கு வீடுகளுக்கு சென்று சிகிச்சை வழங்கும் வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவரையும், அவரது உதவியாளர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கெஸ்பேவ பகுதியில் வைத்து, இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியர் என அடையாளம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வேன் ஒன்றில் வருகைத் தந்து, கொவிட் நோயாளர்களுக்கு வீடுகளில் சிகிச்சை வழங்கும் வகையில் இவர்கள் செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

வீட்டிற்கு வருகைத் தந்து சிகிச்சைகளை வழங்குவதற்காக 11,000 ரூபா முதல் 13,000 ரூபா வரை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (ADA DERANA)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »