கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அபே ஜனபல கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்ததுடன், அந்த பதவிக்காக ரத்தன தேரர் நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும், ரத்தன தேரர் 6 மாதங்களுக்கு மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சென்றதாக கலகொடஅத்தே ஞானசார தேரர், இன்று தெரிவித்துள்ளார்.
ரத்தன தேரர் தமக்கு வாக்குறுதி வழங்கிய விதத்தில், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து, தனக்கு சந்தர்ப்பத்தை வழங்குவார் என தான் எதிர்பார்ப்பதாக கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்,
சிங்கள இனத்தவர்களின் உரிமைகள் மற்றும் பெளத்த மதத்தை பாதுகாப்பதற்காகவும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழித்து, புர்காவுக்கு தடை கொண்டுவருவதற்காக தான் பாராளுமன்றம் சென்று, குரல் எழுப்ப வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
