பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்குடன், இணைய வசதிகளுடனான 2000 மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாக G.L.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இணைய வசதிகளுடனான இந்த மத்திய நிலையங்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மஹிந்தோதய நிலையங்கள், பாடசாலை விஹாரைகள் மற்றும் சமூக நிலையங்களில் இந்த மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.
