Our Feeds


Friday, August 27, 2021

www.shortnews.lk

PHOTOS: சதொசவில் 120 ரூபாய்க்கு சீனி விற்பனை- கொரோனாவையும், முடக்கத்தையும் மறந்து மக்கள் படையெடுப்பு

 



நாட்டில் பால்மா, சீனி, எரிவாயு, உட்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டும், சில அத்தியாவசிய பொருட்கள் சந்தையில் இல்லாத நிலையில் கல்முனை லங்கா சதொசவில் இன்று சீனி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


இலங்கை உற்பத்தி பால்மா உட்பட சிலவகை பால்மா விற்பனையும் இடம்பெற்றதால் மக்கள் வெள்ளம் லங்கா சதொசவில் குவிந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வத்துடன் விற்பனை நிலையத்தை நோக்கி வந்தாலும் நாட்டின் கொரோனா சூழ்நிலை காரணமாக மக்களை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்நிலைகள் உள்ளதாக கல்முனை லங்கா சதொச முகாமையாளர் தெரிவித்தார்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »