Our Feeds


Friday, August 27, 2021

www.shortnews.lk

தொழிலுக்காக வௌிநாடு செல்லவுள்ளோருக்கான விசேட அறிவிப்பு.

 



தொழிலுக்காக வௌிநாடுகளுக்கு பயணிக்க உள்ளவர்கள் விரைவாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் காணப்படும் தடுப்பூசிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பப்படுவோருக்கு கட்டாயம் தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற அறிவித்தலுக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »