Our Feeds


Tuesday, August 31, 2021

www.shortnews.lk

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கசிப்பு, ஐஸ் போதைப் பொருளுடன் 3 பேர் கைது!

 



(காங்கேயனோடை நிருபர்)


காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கசிப்பு என்பவற்றுடன் மூவர் இன்று (31) செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 581 மில்லி பிறாம், 550 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், ஒரு போத்தல் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »