Our Feeds


Tuesday, August 31, 2021

www.shortnews.lk

BREAKING: லொக்டவுன் 14ஆம் திகதிவரை நீடிக்கப்படுமா? அரசாங்கம் இன்று அளித்த பதில்.

 



நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அரசாங்கம் தெரிவிக்கின்றது.


அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பு கொழும்பில் இன்று காலை நடந்தது.

இதில் உரையாற்றிய அமைச்சரவை இணைப் பேச்சாளரான பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரண இதனைத் தெரிவித்தார்.

அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை 14ஆம் திகதிவரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எனினும் அதுபற்றி நேற்று நடந்த அமைச்சரவை சந்திப்பில் இதுபற்றி பேசப்படவே இல்லை என்றார் அமைச்சர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »