சவூதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் இன்று நடந்த ட்ரோன் தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்ததுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே அபா சர்வதேச விமான நிலையத்தைத் தாக்க முயன்ற இரண்டாவது ட்ரோன் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியா 2015 ஆம் ஆண்டில் இருந்து யேமனில் நடந்து வரும் உள்நாட்டு போரில் தலையிட்டுள்ளது. ஹுத்தி தலைநகர் சனாவைக் கைப்பற்றி உள்ளது.
இந்த சூழலில் ஈரான் ஆதரவுடன் போரில் பங்கேற்றுள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பலமுறை எல்லை தாண்டிய தாக்குதல்களை சவூதி அரேபியா மீது நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பயணிகள் விமானம் ஒன்று சேதமடைந்துள்ளது. எனினும் இந்த தாக்குதலுக்கு ஹவுதி அமைப்பினர் பொறுப்பேற்கவில்லை.
எவ்வாறாயினும், ட்ரோன் தாக்குதல்கள் நடத்துவதை ஹவுதி அமைப்பினர் வழக்கமாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
