Our Feeds


Monday, August 30, 2021

www.shortnews.lk

ஆதிவாசிகளின் தலைவரின் மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்கள் 44 பேருக்கு கொரோனா

 



(வத்துகாமம் நிருபர்)


தம்பானே ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவின் மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்கள் 44 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் சிலர் மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தம்பானே ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவின் மனைவி மஹியங்கனை மருத்துவமனையில் கொவிட்-91 சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொதுச் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, பண்டைய கிராமமான தம்பானே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 115 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜென் சோதனையின்போது 44 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் கண்டியில் நிறைவடைந்த தலதா எசல பெறஹராவின்போது தேன் பூஜைக்காக தம்பானே பழங்குடிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவின் குழுவினர் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தகக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »