Our Feeds


Sunday, August 29, 2021

www.shortnews.lk

BREAKING: ஆப்கானிஸ்தான் - காபூல் நகரில் சற்றுமுன் மீண்டும் குண்டு வெடிப்பு

 



ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால் அங்குப் பதற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது.


ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதில் இருந்து அங்கு மிகப் பெரிய குழப்பம் நிலவி வருகிறது.

அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இதனால், காபூல் விமான நிலையத்தைச் சுற்றி ஆயிரணக்கணக்கன மக்கள் கூடியுள்ளனர். இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐ.எஸ் பயங்கவாதிகள் அங்கு நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தச் சூழலில் ஆப்கன் தலைநகர் காபூல் அருகே மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அங்குப் பல மடங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இது ராக்கெட் தாக்குதலாக இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »