Our Feeds


Tuesday, August 31, 2021

www.shortnews.lk

JUST_IN: நாட்டை முடக்கினாலும் புதிய வைரஸ் நாட்டுக்குள் நுழைவதை தடுக்க முடியாது - விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை

 



நாட்டை முடக்கினாலும், பயணக்கட்டுப்பாடுகளை விதித்தாலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றினாலும் புதிய வைரஸ் பிறழ்வுகள் ஏற்படுவதை ஒருபோதும் தவிர்க்க முடியாது என வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர கூறுகின்றார்.


சுற்றுலாத்துறைக்காக நாட்டை திறக்கின்ற காரணத்தினால் இந்த அபாயம் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகில் அதிக கவனம் செலுத்தப்படுகின்ற தென்னாபிரிக்க கொரோனா வைரஸ் குறித்து ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »