Our Feeds


Saturday, August 28, 2021

www.shortnews.lk

மனைவியின் சம்பளத்தில் தான் வாழ்கிறேன் - கொரோனா ஒழிப்புக்கு சம்பளத்தை வழங்க முடியாது - SB திஸாநாயக SLPP, MP

 



அமைச்சர்கள் அனைவரும் தங்களது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், தனது சம்பளத்தை வழங்கக்கூடிய நிலைமை இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


கடன் ஒன்று பெற்றமைக்காக தனது சம்பளம் முழுவதும் அதற்கு அறவிடப்படுவதாகவும், தற்போது மனைவியின் சம்பளத்திலேயே தான் வாழ்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு குறிப்பிட்ட தொகையை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்குவதாகவும், சுமார் 300 இலட்சம் வரை வங்கிக் கடன் செலுத்தவேண்டியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »