Our Feeds


Monday, August 30, 2021

www.shortnews.lk

SHORT_BREAKING: இலங்கை தமிழர்களுக்காக 317 கோடி & 7469 வீடுகள் - தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உதயகுமார் MP நன்றி தெரிவிப்பு

 



தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள்  குறித்து கரிசனையுடன் செயற்படும் தமிழக அரசுக்கும் மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் நன்றிகளை தெரிவித்துள்ளார்.


மேலும் அலர் தெரிவித்ததாவது     தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 317 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு 7469 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட இருப்பதையும் வரவேற்ப்பதாக தெரிவித்துள்ளார்.


அத்துடன், முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படல் மற்றும் இலங்கை தமிழர்களின பிள்ளைகளின்

கல்வி மேம்ப்பாட்டுக்காக கலவி ஊக்கத்தொகை அளித்தல் போன்ற நலத்திட்டங்களுக்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும்  நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »