ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு தினம் கூட கடமைக்கு சமூகமளிக்காத பாடசாலை அதிபர் ஆசிர்கள் உள்ளடங்களாக 6 மாதங்களாக ஒரு நாள்கூட பணிக்குச் செல்லாத பெருமளவான அரச ஊழியர்கள் இருப்பதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும் அவர்கள் அனைவருக்கும் இதுவரையில் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், உயர் அதிகாரிகள் சில மணிநேரங்களுக்கு மாத்திரம் கடமைக்கு வந்துவிட்டு போக்குவரத்து மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் அலுவலகங்களில் சுமார் 2, 3 மணித்தியாலங்கள் மாத்திரமே இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக பல தனியார் நிறுவனங்கள் பணியாளர்களின் கடமை நேரத்திற்கு அமைவாக சம்பளத்தை செலுத்தி வந்துள்ளன.
மேலும் சில நிறுவனங்கள் எவ்விதமான மேலதிக கொடுப்பனவுகளும் இன்றி அடிப்படை சம்பளத்தை மட்டும் ஊழியர்களுக்கு வழங்கி வந்துள்ளன.
