Our Feeds


Saturday, August 28, 2021

www.shortnews.lk

JUST_IN: நாட்டில் மணித்தியாலத்திற்கு 9 பேர் கொரோனாவில் மரணம் - விசேட வைத்தியர் பரபரப்பு

 



தற்போதைய கொரோனா நிலைமையில் மணித்தியாலத்திற்கு 9 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து வருவதாக விசேட வைத்தியர் பத்மா குணர்த்ன தெரவித்துள்ளார்.


இவ்வாறு உயிரிழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி எதனையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் இதுவரையில் பதிவான கோவிட் மரணங்களில் அதிகளவானவை 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »