2022 பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியுடன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக பாகிஸ்தான் சகலதுறை வீரர் சஹிட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
41 வயது அப்ரிடி, பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகள், 398 ஒருநாள் மற்றம் 99 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சஹிட் அப்ரிடி அப்ரிடி, சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தபோது ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். 1996இல் தன்னுடைய 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 37 பந்துகளில் சதமடித்து உலக சாதனை ஏற்படுத்தினார். இதன்பிறகு இந்தச் சாதனையை குரே அண்டர்சனும் (36 பந்துகள்) டி வில்லியர்ஸும் (31 பந்துகள்) முறியடித்தார்கள் .
அப்ரிடி கடைசியாக 2016இல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். அதன்பிறகு பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் தொடர்ந்து விளையாடி வந்தார்.
50 PSL ஆட்டங்களில் விளையாடிய அப்ரிடி, அடுத்த வருடத்துடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2022 PSL போட்டி, ஜனவரி, பெப்ரவரியில் நடைபெறவுள்ளது. இதுவரை மூன்று அணிகளில் விளையாடிய அப்ரிடி, அடுத்த வருடம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
முல்தான் அணி எனக்கு அனுமதி தந்தால், குயிட்டா அணி உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்தால் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் விளையாடுவேன் என அப்ரிடி குறிப்பிட்டுள்ளார்.
