Our Feeds


Saturday, September 11, 2021

www.shortnews.lk

"ஒற்றுமையாக இருப்பதே மிகப் பெரிய வலிமை"- செப்டம்பர் 11 நினைவு நாளில் நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபர் உரை.

 



அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலின் 20ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் ஜோ பைடன், அமெரிக்கர்கள் அனைவரும் ஒற்றுமையை காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.


செப்டம்பர் 11 தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் இருந்து தான் கற்றுக்கொண்ட முக்கிய பாடம் ஒற்றுமையாக இருப்பது என்பதே என்று தெரிவித்த பைடன், தாக்குதலுக்கு பிறகான நாட்களில் பார்த்ததைப் போல, சோதனையான காலகட்டங்களிலும் ஒற்றுமையாக இருப்பதே அமெரிக்கர்களின் மிக பெரிய வலிமை என்று கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »