Our Feeds


Sunday, September 12, 2021

SHAHNI RAMEES

கல்கிஸை - அங்குலான பகுதியில் சுனாமி பீதி! - உடமைகளுடன் வீட்டை விட்டு ஓடிய மக்கள்

 


வானிலை ஆய்வு மையத்தால் சுனாமி விடுக்கப்பட்டுள்ளதாக பரப்பட்ட வதந்திதை தொடர்ந்து அங்குலானா பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இன்றிரவு ஏற்பட்டுள்ளது.

இந்த போலி பிரச்சாரத்தின் காரணமாக பொது மக்கள் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடியுள்ளனர்.

இதனால் கல்கிஸை, அங்குலான பிரதேசங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது யாரோ ஒருவர் மேற்கொண்ட போலி பிரச்சாரம் என்று அங்குலான பொலிஸ் நிலைய தலைமை ஆய்வாளர் சாரதா பெர்னாண்டோ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும், அவ்வாறு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், தற்போது கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், சுனாமி ஏற்படுவதாக வதந்திகள் பரவி வருகின்ற நிலையிலேயே, பொலிஸார் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »