Our Feeds


Sunday, September 12, 2021

SHAHNI RAMEES

இலங்கையில் அரை மில்லியனைத் தாண்டியது அப்பிள் ஸ்மார்ட்பேசியின் விலை!

 

இலங்கையில் இறக்குமதி பொருட்கள் தொடர்பில் அண்மையில் மத்திய வங்கியினால் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

அனேகமான அலைபேசிகளின் விலைகள் அதிகளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஐபோன் 12 ப்ரோ மெக்ஸ் ( கிராப்டீ 512 ஜீ.பி.) ஐபோன் 12 ப்ரோ மெக்ஸ் (சில்வர் 512 ஜீ.பி.) ஆகிய ஸ்மார்ட் பேசிகளின் விலைகள் அரை மில்லியன் அல்லது ஐந்து லட்சம் ரூபாவிற்கும் மேல் விலையிடப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் இந்த ஸ்மார்ட் பேசியின் சந்தை விலை ஒரு லட்சம் ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

சாதாரண ஸ்மார்ட் பேசிகளின் விலைகள் 5000 முதல் 7000 ரூபா வரையில் உயர்த்தப்பட்டுள்ளதுடன், பிரபல பண்டக்குறியைக் கொண்ட மத்திய ரக ஸ்மார்ட் பேசிகளின் விலைகள் 10000 ரூபா முதல் 15000 ரூபா வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ம் திகதியின் பின்னர் இந்த விலைகள் மேலும் உயர்வடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது என தெற்கு இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »