Our Feeds


Sunday, September 12, 2021

SHAHNI RAMEES

சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தாமதமடைவதை தடுக்க சுற்றுநிரூபம்

 


மேல்நீதிமன்றங்களில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் தாமதமடைவதை தவிர்ப்பதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்று நிரூபம், சகல மேல்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தாமதமடைவது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த சுற்றுநிரூபம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்குவது மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எதிர்பார்ப்பாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »