இலங்கை மின்சார சபையின் பணியாளா்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்படுகின்ற மின்சாரத் தடைகளை சீர்செய்ய முடியாவிட்டால் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டணியின் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அனைத்து நீரேந்து நிலையங்களும், நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் மின்சாரம் மூலமே இயக்கப்படுகின்றன.
இந்தநிலையில், மின்சாரத் தடை ஏற்பட்டால், தேவையான மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள மாற்று நடவடிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.