Our Feeds


Tuesday, November 30, 2021

ShortNews

BREAKING: கடந்த 24 மணித்தியாலங்களில் 20 சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவு



கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுடன் தொடர்புடைய 20 தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


இது போன்ற சம்பவங்கள் மாத்தறை – நாவிமன, மீகொட, அத்துருகிரிய, மீரிகம, அம்பலாங்கொட, கடவத்தை, தியத்தலாவ, கொள்ளுப்பிட்டி, களுத்துறை, கெக்கிராவ, பத்தனை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளன.

இதனையடுத்து, சமையல் எரிவாயுடன் தொடர்புடைய தீப்பரவல்கள் அல்லது வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும் அதுகுறித்த தீர்வினை வழங்குவதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »