புத்தள பிரதேசத்தில் நீண்ட காலமாக காணப்படும் வெள்ளம் மற்றும் மழை நீர் வெளியேற்றத்துக்கு தீர்வு இன்மையால் புத்தளம் அனுராதபுர வீதியில் இன்று (30) தீர்வு கோரி பிரதேச மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளத்தினால் மட்டுமன்றி மழைநீராளும் புத்தளத்தின் கடையாக்குளம், மணல் குன்று போன்ற பகுதிகள் பாதிக்கப்படுவதால் அவற்றுக்கு தீர்வு காண பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மூலமாக சிறிய பாலங்கள், கல்வெட்டுகள் அமைப்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு போன்றவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான அனுமதிகள் கிடைத்திருக்கின்ற நிலையில்,
புத்தளம் அந்நூர் புகையிரத பாதையூடாக செல்லும் கால்வாய் அகற்றப்பட வேண்டிய அவசியம் உணரப்பட்டது. இதற்குரிய அனுமதியை புகையிரத திணைக்களம் தர தாமதிப்பதால் வேலைத்திட்டங்கள் தாமதமாகி வருவதாக கூறி இவற்றுக்கு தீர்வு வேண்டியே இன்று ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசாங்க ஆதரவு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமும் நேரடியாக இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.