(இராஜதுரை ஹஷான்)
பெரும்பான்மை பலம் எமது கைகளில்தான் உள்ளது என குறிப்பிட்டுக் கொண்டு பொதுஜன பெரமுனவை சுதந்திர கட்சியால் அடிபணிய வைக்க முடியாது. அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்பட முடியாவிடின் தாராளமாக அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் என போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்குள் காணப்படும் முரண்பாடுகளுக்கு சுதந்திர கட்சி உள்ளக பேச்சுவார்த்தை ஊடாக தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும்.அதனை விடுத்து அரசாங்கத்தையும் கூட்டணியையும் விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை குறிப்பிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது.
பெரும்பான்மை பலம் எம் கைகளில்தான் உள்ளது என கூறிக் கொண்டு பொதுஜன பெரமுனவை சுதந்திர கட்சியால் அடிபணிய வைக்க முடியாது.
அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்பட முடியாவிடின் சுதந்திர கட்சியினர் தாராளமாக அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம்.அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது நாகரிமற்றது என்றார்.