Our Feeds


Tuesday, November 30, 2021

ShortNews

BREAKING: கேஸ் சிலிண்டர்கள் வெடிப்பு - விசேட விசாரணைக் குழுவை நியமித்தாா் ஜனாதிபதி



எரிவாயு சிலிண்டர்கள் தீப்பரவலுக்குள்ளாகுதல் அல்லது வெடிப்புக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட நிபுணர்களின் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் பல பாகங்களில் கடந்த சில தினங்களில் தொடர்ச்சியாக எாிவாயு சிலிண்டர்களுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வருகின்ற நிலையிலேயே ஜனாதிபதி குறித்த குழுவை நியமித்துள்ளார்.

இந்த குழுவின் உறுப்பினர்களாக எட்டு போ் நியமிக்கப்பட்டுள்ளனா். அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

குழுவின் உறுப்பினர்கள் விபரம் இதோ,

  • பேராசிரியர் ஷாந்த வல்பொல – மொரட்டுவை பல்கலைக்கழகம் (தலைவர்)
  • சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்
  • பேராசிரியர் அஜித் டி சில்வா – மொரட்டுவை பல்கலைக்கழகம்
  • பேராசிரியர் டபுள்யு.டீ.டபுள்யு. ஜயதிலக்க- ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
  • பேராசிரியர் பிரதீப் ஜயவீர
  • பேராசிரியர் நாராயன் சிறிமுது – இலங்கையின் புதிய உற்பத்தியாளர்கள் ஆணைக்குழுவின் ஆணையாளா்
  • கலாநிதி சுதர்ஷன சோமசிறி – கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம்
  • சுஜீவ- சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் (தரநிர்ணய நிறுவனம்)

இரண்டு வாரங்களுக்குள் விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »