வீடுகளுக்குள் ஆடையின்றி புகுந்து இரவு நேரங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவரும் நபரொருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸாா் ஆரம்பித்துள்ளனா்.
கடந்த சில தினங்களாக இந்த நபர் நிட்டம்புவ, பொல்ஹேன பிரதேசத்தில் இந்த நபர் நடமாடியுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
இவர் 35 – 40 வயதுக்கு இடைப்பட்டவர் என்பதுடன் சந்தேகநபர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நிட்டம்புவ பொலிஸாா் குறிப்பிட்டுள்ளனா்.
கடந்த காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் கிறீஸ் மனித நடமாட்டங்கள் காணப்பட்டு வந்த நிலையில் மீண்டும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்று வருவதாக மக்களிடையே பேசப்பட்டுவருகிறது.