Our Feeds


Monday, December 27, 2021

SHAHNI RAMEES

தண்ணீர் கட்டணம் செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் : 10 மில்லியன் நிலுவை

 

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் தங்களது நீர் கட்டணத்தை ஒழுங்காக செலுத்தத் தவறிய காரணத்தினால் 10 மில்லியன் ரூபா நிலுவையில் உள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த முக்கியஸ்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டுவரும் நீர் விநியோகத்தை துண்டிக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் 1.8 மில்லியன் ரூபா நீர் கட்டணத்தை தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த தவறியுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »