Our Feeds


Wednesday, December 1, 2021

ShortNews

இராணுவ ஹெலிகொப்டர் விபத்து - 14 பேர் பரிதாபமான பலி



சர்பைஜான் நாட்டில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், 14 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.


கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்காசிய எல்லையில் அமைந்துள்ள நாடு அசர்பைஜான். இங்கு இராணுவ பயிற்சி ஹெலிகொப்டர், நேற்று கரேபத் இராணுவ மையத்திற்கு மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 14 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த இராணுவ மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »