Our Feeds


Wednesday, December 1, 2021

ShortNews

பிரதேச சபை உறுப்பினர் சிவபாலன் தனங்களப்பு பண்ணை வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்!



(மயூரன்)


சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் உள்ள பண்ணை வீட்டிலிருந்து யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் (புத்தூர் பிரதேச சபை)  இன்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புத்தூர் வடக்கு, ஆவரங்கால் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் சிவபாலனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


ஆவரங்கால் பகுதியை சேர்ந்த இவர் தனங்களப்பு பகுதியில் தென்னம் தோட்டம் ஒன்றைபராமரித்து வருவதுடன் தோட்டத்துடன் இணைந்த வீட்டில் வசித்தும் வந்துள்ளார்.

அவரது பண்ணை வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அயலவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »