Our Feeds


Thursday, December 30, 2021

ShortNews

VIDEO: வாரியபொல பிரதேசசபையில் சண்டை - தண்ணீர் போத்தல்களினால் அடித்துக் கொண்ட உறுப்பினர்கள்





வாரியபொல பிரதேச சபையின் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக கூட்டம் 45 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.


எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்டம் இரண்டு முறை தோல்வியை சந்தித்துள்ளதுடன், தற்போதைய தலைவருக்கு பொதுக் கூட்டத்தை அழைக்க சட்ட ரீதியான எந்த வாய்ப்பும் இல்லையென 21 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையினால் அமைதியற்ற நிலை உருவாகியுள்ளது.

இதன்போது, தலைவர் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினா் ஜயதிஸ்ஸ மாகும்புரவுக்கிடையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், பிரதேச சபை உறுப்பினர்கள் குடிநீர் போத்தல்களில் தாக்கிக்கொண்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

வரவு செலவுத்திட்ட யோசனை இரண்டு முறைகள் தோல்வியை சந்தித்துள்ள சந்தர்ப்பத்தில் சபையை முன்னெடுத்துச் செல்வது அல்லது சபைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவது குறித்து ஆளுநர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று அந்த பிரதேச சபையின் தலைவர் டீ.எம்.டி.பி. திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளாா்.

இருந்தபோதிலும் இதுவரையில் ஆளுநரிடமிருந்து அவ்வாறான எந்த ஆலோசனைகளும் கிடைக்கவில்லை என்பதால், உள்ளூராட்சிமன்ற ஆணையாளரின் ஆலோசனைக்கமையவே தான் பொதுக் கூட்டத்தை அழைத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

இதேவேளை, தன்னை தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு ஆளுநர் அறிவிப்பராக இருந்தால் அந்த சந்தர்ப்பத்திலேயே பதவிவிலக தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா். இருந்த போதிலும் அதுவரையில் சபையை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது தனது பொறுப்பும், உரிமையும் என அவர் மேலும்  சுட்டிக்காட்டியுள்ளாா்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »