Our Feeds


Monday, January 17, 2022

ShortNews

அபுதாபி ட்ரோன் தாக்குதல் - வெடித்துச் சிதறிய 3 எண்ணைத் தாங்கிகள் - 03 பேர் இதுவரை பலி



அபுதாபியில் ADNOC எண்ணெய் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குக்கு அருகிலுள்ள முசாஃபா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் தாக்குதலில் மூன்று 3 எண்ணெய்த் தாங்கிகள் வெடித்துச் சிதறியமை உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.


இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்தில் இரு இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் கட்டுமான தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அபுதாபி பொலிஸார் தெரிவித்தனர். இது ட்ரோன் மூலம், தங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று, ஏமனின் ஹவுதி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

சம்பவம் குறித்து முழுமையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »