Our Feeds


Monday, January 17, 2022

ShortNews

எமது வாய்களுக்கு பூட்டுப்போட்டு சாவியை மொட்டுக்கட்சி தலைமையகத்தில் வைக்க முடியாது - மைத்திரி கடும் தாக்கு



ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களின் வாய்களுக்கு பூட்டு போடுவதற்கு மொட்டு கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஆனாலும் உண்மைகளை கதைப்பதற்கு நாம் தயங்கமாட்டோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

”ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பலமடைந்துவருகின்றது. கட்சியின் முக்கியத்துவத்தை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் எமது வாய்களுக்கு பூட்டுபோட்டு, சாவியை மொட்டு கட்சி தலைமையகத்தில் வைப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

உண்மையை வெளிப்படையாக கதைப்போம். அநீதிகள் இடம்பெற்றால் அவற்றை சுட்டிக்காட்டுவோம்.” – என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »