நாட்டில் மேலும் 75 ஒமிக்ரொன் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இன்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த ஒமிக்ரோன் நோயாளர்கள் பதிவான பிரதேசங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதற்கமைய, தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 75 பேரும் பின்வரும் பகுதிகளில் வசித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒமிக்ரொன் BA.1 வகை
கொழும்பு, அவிசாவளை, பொரலஸ்கமுவ, ஹோமாகம, கட்டுகொட, கொஸ்கம, மடபாத்த, பாதுக்க, பரகடுவ மற்றும் வெல்லம்பிட்டி
ஒமிக்ரொன் BA.2 வகை
அவிசாவளை, பதுளை, கொழும்பு, காலி, கொன்னாவல, கல்கிஸை, நுகேகொடை மற்றும் இந்தியாவில் இருந்து வந்த பயணிகள் 7 பேர்
ஒமிக்ரொன் B.1.1.529
அங்கொட, கொழும்பு, ருவான்வெல்ல, கல்கிஸை, நுகேகொடை, பாதுக்க மற்றும் அவிசாவளை