Our Feeds


Sunday, January 30, 2022

ShortNews

குடும்பத்துடன் தலைமறைவான கனடா பிரதமர் ஜஸ்டின் – மக்கள் பதற்றம்



கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


கனடா எல்லையை கடக்கும் லொறி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளாா். இந்த அறிவிப்புக்கடும் எதிர்ப்புகள் வெளியாகியிருந்தன.

இதனைத் தொடர்ந்து கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றது. நூற்றுக்கணக்கானவர்கள் தலை நகரில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் ரகசிய இடத்தில் தலைமறைவாகி இருக்கிறார்.

இதுகுறித்து ஜெனரல் வெய்ன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ போராட்டக்காரர்கள் தேசிய போர் நினைவிடத்தை இழிவுபடுத்துவதையும் கண்டு நான் வேதனையடைந்தேன். கனடாவில் முந்தைய தலைமுறைகள் சுதந்திரமான பேச்சு உட்பட நமது உரிமைகளுக்காகப் போராடி மடிந்தன, ஆனால் இவ்வாறு இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்று தெரிவித்துள்ளாா்.

கொரோனா தொற்று உலக அளவில் பரவ ஆரம்பித்து இரு வருடங்கள் கடந்து விட்டன. டெல்ட்டா, ஒமைக்ரான் போன்று கொரோனா திரிபுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கொரோனாவுக்கு தடுப்பூசியே தீர்வு என்று மருத்துவ நிபுணர்கள் வலுவாக முன்வைக்கும் நிலையில் தடுப்பூசியா, தனிமனித சுதந்திரமா? போன்ற விவாதங்கள் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »