கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளமையினால் எதிர்காலத்தில் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் மாத சம்பளம் பெறுபவர்களுக்கு பாரதூர சிக்கல் நிலை ஏற்படுமென பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளாா்.
அவ்வாறானவொரு நிலைமைக்கு நாட்டை தள்ளிவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பு மக்களிடம் இருப்பதாகவும் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டு சுகாதார விதிமுறைகளை பின்பற்றினால் நாடு இக்கட்டான நிலையை சந்திப்பதை தவிர்த்துக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளாா்.
எந்த வைரஸ் பரவலடைகிறது என்பதை ஆராய்வதற்கு பதிலாக சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைளை முன்னெடுப்பதே மிக அவசியமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
கொரோனா தொற்றுப்பரவலின் தற்போதைய நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.