நாட்டின் தற்போதைய நிலைமைக்கமையை தமது கட்சிக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தாலும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளாா்.
நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் ஒருசில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளா்ா.
“ நாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டோம் என்பதற்காக நாடு அபிவிருத்தி அடையபோவதில்லை. மறுபக்கத்தில் பொருளாதார நிபுணர்கள் இருக்கிறார்கள். எங்களிடமும் நிபுணத்துவம் வாய்ந்த நபர்கள் இருக்கிறார்கள். இந்த இரு பிரிவினர்களால் மாத்திரம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. ஊழல் மற்றும் துஷ்பிரயோகங்களின் காரணமாகவே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாமல் உள்ளது. பொறுப்புக் கூறல் இல்லை.
அதனால் ஏந்த பொருளாதார நிபுணர்கள் வந்தாலும் சமநிலைப்படுத்துமாறே கூறுவார்கள். நாட்டில் உற்பத்தி இல்லையென்றால் நாடு வளர்ச்சியடையாது. மறுபுறம் ஊழல். எமது கட்சி மாற்றமடைய வேண்டுமாயின் இந்த விடயங்களை புரிந்துக்கொண்டு ஒரே நேர்கோட்டில் செயற்பட வேண்டும்.
எமது தலைவர் இந்த இடத்திலிருந்திருந்தால் நீங்கள் இனிமேல் ரணசிங்க பிரேமதாசவின் பெயரை குறிப்பிட வேண்டாம். காரணம் அவற்றில் தற்போது எமக்கு எந்த பயனும் இல்லை. நாம் கட்டாயம் எமக்கான பயணமொன்றை தீர்மானித்துகொள்ள வேண்டும். எம்மில் புதிய தலைவர்கள் உருவாக வேண்டும் என்ற தகவலை இவ்வாறே கூறியிருப்பேன்.” என்று தெரிவித்துள்ளா்ா.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்பேதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.