நாட்டின் நிதி நிலை குறித்த அறிக்கையை பகிரங்கப்படுத்தினால் அது பாரிய பிரச்சினையாக அமையும் என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளாா்.
“கொடுக்க முடியும். ஆனால், அது அங்கே ஒரு பெரிய பிரச்சினை. நான் அதை அமைச்சரவைக்கு வழங்குவேன்.”என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளாா்.
இதன்படி அடுத்த அமைச்சரவையில் அறிக்கையை சமர்ப்பிக்க நிதி அமைச்சர் இணங்கியுள்ளாா்.
இதுவேளை, இவ்வருடம் இலங்கை அரசாங்கம் செலுத்தவேண்டிய வெளிநாட்டுக் கடன் தொகை 690 மில்லியன் அமெரிக்க டொலர் என நிதியமைச்சு அமைச்சரவைக்கு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.