Our Feeds


Sunday, January 2, 2022

ShortNews

பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவது உண்மையா? - பிரதமர் மஹிந்த அதிரடி பதில்



பிரதமர் பதவியில் இருந்து ஓய்வு பெறுமளவிற்கு தனக்கு அவசியமில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


வார இறுதி பத்திரிக்கையொன்றுக்கு பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.


“நாட்டிற்கு கிடைத்துள்ள ஜனநாயக சுதந்திரத்தை பயன்படுத்தி சிலர் அரசாங்கம் குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.  


இவ்வாறான கதைகளை நாட்டின் புத்திஜீவிகள் ஏற்றுக் கொள்வதில்லை. ஜனநாயக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திக் கொள்வது நியாயமானது அல்ல” எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ள நிலையில், புதிய பிரதமராக பசில் ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »