தென்னாப்பிரிக்காவின் தலைநகரான கேப்டவுனிலுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று (02) அதிகாலை பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியளவில் இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
தீ கட்டுக்குள் வரவில்லை என்றும் மேலும் கட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் உறுதிப்படுத்தப்பட வில்லை.