Our Feeds


Monday, January 17, 2022

ShortNews

எரிபொருள் இல்லையென்றால் மின்வெட்டு - மின்சக்தி அமைச்சர்



களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு இதுவரை 3,000 மெற்றிக் தொன் எரிபொருள் கிடைத்துள்ளதாகவும், எனவே நாளை வரை எவ்விதமான மின்வெட்டுமின்றி மின்சார விநியோகம் இடம்பெறும் என்றும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் 22ஆம் திகதி வரை எரிபொருள் பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மெலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இனி டொலர்கள் இன்றி இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்க முடியாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »