Our Feeds


Monday, January 17, 2022

ShortNews

இலங்கையில் பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை மேலும் அதிகரிக்குமா?



உலக சந்தையில் எரிபொருள் விலை மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தில் பிராண்ட் ரக எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.6 அமெரிக்க டொலராக காணப்பட்டது.

இதன்படி கடந்த வாரத்தில் 5.4 சதவீதத்தால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.

அத்துடன், அமெரிக்க டபிள்யு.டி.ஐ எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 6.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன், 83.82 அமெரிக்க டொலராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இலங்கையிலும் எரிபொருளின் விலை அதிகரிக்குமா, இல்லையா என்பது குறித்து எதிர்வரும் நாட்களில் அரச உயர்மட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »