Our Feeds


Monday, January 3, 2022

ShortNews

பிள்ளைகளை நிர்வாணப்படுத்தி, உடலில் மிளகாய்தூள் போட்டு சித்திரவதை செய்த தந்தை கைது



ஹட்டன்-குடாகம பகுதியில் பிள்ளைகளை மரத்தில் கட்டி வைத்துத் தாக்கிய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

7 வயதான மகளையும் 5 வயதுடைய தமது மகனையுமே அவர் இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இருவரையும் நிர்வாணமாக்கி, சரீரத்தில் மிளகாய்த்தூளைத் தூவி அவர் சித்திரவதைக்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், பிரதேச மக்களின் தலையீட்டுடன் குறித்த சிறுவர்கள் விடுவிக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தையடுத்து சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »