Our Feeds


Sunday, January 16, 2022

ShortNews

நேற்று திறக்கப்பட்ட மத்திய அதிவேக வீதியின் குருநாகல் நுழைவாயில் மாத்திரம் பூட்டு (PHOTO)



நேற்றைய தினம் (15) திறக்கப்பட்ட மத்திய அதிவேக வீதியின் குருநாகல் நுழைவாயில் மாத்திரம் மூடப்பட்டுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


குருநாகல் நுழைவாயில் மாத்திரம் இதுவரை திறக்கப்படாத நிலையில், மத்திய அதிவேக வீதியின் ஏனைய அனைத்து நுழைவாயில்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

மத்திய அதிவேக வீதியின் திறப்பு விழாவை முன்னிட்டு, குருநாகல் நுழைவாயிலுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்கள் மற்றும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கம்பங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்ததை அடுத்தே, குருநாகல் நுழைவாயில் திறக்கப்படும் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குருநாகல் நுழைவாயில் வழியாக மீரிகம திசையை நோக்கி பயணிப்பதற்காக வருகைத் தந்த பெரும்பாலான சாரதிகள், ஏமாற்றத்துடன் மீண்டும் திரும்புவதாக பாதிக்கப்பட்ட சாரதிகள் கூறியிருந்தனர்.

இதையடுத்து, குருநாகல் பொலிஸாரிடம் வினவிய போதே, இதனை பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

குருநாகல் நுழைவாயிலை தவிர்ந்த, ஏனைய அனைத்து நுழைவாயில்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய நுழைவாயில்களின் ஊடாக செல்ல முடியும் எனவும் பொலிஸார், சாரதிகளிடம் கேட்டுக்கொள்கின்றனர்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »