Our Feeds


Sunday, January 16, 2022

ShortNews

கிராண்ட்பாஸில் இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 14 வயது சிறுவன் உட்பட இருவர் காயம்



கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலத்துறை பகுதியில் இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 14 வயதுடைய சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.


இன்று (16) காலை குறித்த கட்டடம் இடிந்து வீழ்ந்துள்ளதுடன், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த கொத்தனார் மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கிய இருவரும் மீட்கப்பட்டு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »