புகையிரத நிலைய அதிபர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் மேற்கொண்டுள்ள 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக இன்று (13) மலையக புகையிரத சேவைகள் பாதிப்புக்குள்ளாகின.
அந்தவகையில், 13.01.2022 அன்று அதிகாலை நானுஓயாவிலிருந்து கண்டி செல்லவிருந்த புகையிரதம் நானுஓயா புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, பண்டாரவளை புகையிரத நிலையத்திலும் நேற்றிரவு பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதிகாரிகளின் பொருப்பற்ற பதில்களை கேட்ட பயணிகள் காரியாலயத்தை ஆக்கிரமிப்பு செய்து கோசங்களை எழுப்பியதோடு, வைத்திய தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காகவும், தொழில் நிமிர்த்தமாகவும் கண்டி, கொழும்பு போன்ற பகுதிகளுக்கு செல்லவிருந்த மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.